
iPhone 15 Pro
Unbeatable savings & flexibility with your iPhone 15 Pro via Unbeatable 5G U Postpaid plans. Enjoy 0% instalment with U PayLater. Sign up today!
பொது
1. GX30 30 நாட்களுக்கான இணையச் சேவை கொண்ட திட்டமாகும் ("GX30 Plan").
2. இத்திட்டம் U Mobile பிரிபெய்ட் பயனீட்டாளர்களுக்கு மட்டுமானது, U Broadband சேவையிலிருக்கும் சந்தாதாரர்களுக்கு இது கிடையாது.
3. இத்திட்டத்தை வேறு எந்தக் கைப்பேசி எண்களுக்கும் மாற்ற இயலாது.
4. இத்திட்டம் U Mobile பிரிபெய்ட்டின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த விதிகளுக்கு நீங்கள் உடன்படுவதோடு, எங்களின் நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (Fair Use Policy) , அ
ந்தரங்கக் கொள்கை மற்றும் இந்தக் கூடுதல் விதிகள் மற்றும் நிபந்தனைகள் (ஒட்டுமொத்தமாக "விதிகள்") ஆகியவற்றுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். இவையாவும் www.u.com.my என்ற இணையதளத்தில் காணக்கிடைக்கும்.
5. கட்டண விகிதங்கள் உட்பட இந்த விதிகளை மாற்றியமைக்கவோ அல்லது மாற்றிவிடவோ எங்களுக்கு உரிமை உள்ளது.
6. வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலொழிய, இத்திட்டத்தை வேறு எந்தச் சலுகைகளுடனும் இணைத்துப் பயன்படுத்தவியலாது.
இயக்கம் மற்றும் கட்டணங்கள்
1. இந்த GX30 திட்டத்தை நீங்கள் உங்களின் நடமாடும் கருவிகளில் இயக்கம் செய்யலாம்:
a. MyUMobile செயலியில் Add-ons பகுதியில்; அல்லது
b. *118# என அழுத்தி, அல்லது
c. SMS வாயிலாக 28118-க்கு “ON GX30” என அனுப்பவும். ஒவ்வொரு SMS-க்கும் RM0.05 கட்டணம் விதிக்கப்படும்.
2. நீங்கள் இயக்கம் செய்வதற்கு முன், GX30 திட்டத்துக்காக உங்களிடம் குறைந்தபட்சம் RM30 மீத இருப்புத்தொகை இருக்க வேண்டும்.
3. இத்திட்டத்தின் இயக்கக் கட்டணம் RM30 ஆகும். நீங்கள் அனுமதி அளித்தாலும் அளிக்காவிடினும் உங்களின் இருப்புத் தொகையிலிருந்து இயக்கக் கட்டணமாக RM30-ஐ நாங்கள் கழித்துக்கொள்வோம். தொகையைத் திரும்பக் கோருவதோ அல்லது அத்தொகைக்காக முறையீடு செய்வதோ பரிசீலிக்கப்படாது.
4. இதன் செல்லுபடியாகும் காலம், இயக்கம் செய்யப்பட்டது முதல் 30 நாட்களாகும். 2-ஆம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல (Activation and Charges), இயக்கக் காலம் காலாவதியாகிவிட்டால், உங்களிடம் போதிய இருப்புத் தொகை இருந்தால் மட்டுமே தானியங்கியாக சேவை தொடரப்படும்.
5. போதிய இருப்புத் தொகை இல்லாத காரணத்தால் உங்கள் சேவை தானியங்கியாக தொடரப்படவில்லையானால், உங்கள் சேவை தொடரப்படாது.
6. நீங்கள் உங்கள் விருப்பப்படி எத்தனை GX30 திட்டத்தை வேண்டுமானாலும் இயக்கம் செய்யலாம். GX30 புதுப்பிக்கப்படும்போது பயன்படுத்தப்படாத இணைய ஒதுக்கீடுகள் தள்ளுபடி செய்யப்படும்.
7. நீங்கள் GX30 திட்டத்தை நிறுத்தம் செய்ய விரும்பினால், அதனை நீங்கள் பின்வருமாறு செய்யலாம்:
a. *118#-இல் UMB வாயிலாக; அல்லது
b. SMS வாயிலாக 28118-க்கு “OFF GX30” என அனுப்பியும் நிறுத்தம் செய்யலாம். ஒவ்வொரு SMS-க்கும் RM0.05 கட்டணம்
விதிக்கப்படும்.
8. நீங்கள் GX30 திட்டத்தை நிறுத்தம் செய்துவிட்டால், பயன்படுத்தப்படாத இணைய ஒதுக்கீடுகள் தள்ளுபடி செய்யப்படும். அதன்பிறகு பயன்படுத்தப்படும் இணைய ஒதுக்கீடுகள் அந்தந்த பிரிபெய்ட் திட்டத்தின் கட்டண விகிதங்களுக்கு ஏற்ப விதிக்கப்படும்.
இணைய ஒதுக்கீட்டுச் சேவை
a. GX30 திட்டத்தில் சந்தாதாரராவதன் மூலம், நீங்கள் எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டை 3Mbps வரையிலான வேகத்தில் அனுபவிக்கலாம். GX30 திட்டத்தில் எல்லையற்ற இசை மற்றும் காணொலிகளை வழக்கமான ஒலி வரையறையில் (standard definition ) அனுபவிக்கலாம்.
b. நடமாடும் hotspot பயன்பாட்டுக்கு உங்களுக்குத் தனியே 3GB இணைய ஒதுக்கீடு வழங்கப்படும். அந்த ஒதுக்கீடு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டால், இணைய ஒதுக்கீட்டின் வேகம் கட்டுப்படுத்தப்படும்.
c. Hotspot Booster என்பது, 2-ஆம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல உங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர இணைய ஒதுக்கீட்டைவிட கூடுதல் நடமாடும் hotspot-ஐ வழங்கும் சேவையாகும். நீங்கள் GX30 திட்டத்தில் மட்டுமே Hotspot Booster சேவையில் சந்தாதாரராக முடியும் என்பதோடு இச்சேவை வேறு எந்த U Mobile இணைய ஒதுக்கீட்டுத் திட்டத்திலும் கிடைக்காது. Hotspot Booster-இன் செல்லுபடியாகும் காலம், இயக்கம் செய்யப்பட்டது முதல் 3 நாட்களாகும். நீங்கள் Hotspot Booster சேவையில் சந்தாதாரராகிவிட்டால், நீங்கள் உங்களின் கட்டண விகிதம் அல்லது இணைய ஒதுக்கீட்டை மாற்றும்போது, பயன்படுத்தப்படாத இணைய ஒதுக்கீடுகள் மற்றும் செல்லுபடியாகும் காலகட்டங்கள் யாவும் உங்களின் Hotspot Booster சந்தாவிலிருந்து தள்ளுபடி செய்யப்படும், தொகை திரும்ப வழங்கப்படாது, மேலும் அவை உங்களின் புதிய கட்டண விகிதம் அல்லது இணைய ஒதுக்கீட்டில் கொண்டு சேர்க்கப்படாது.
d. Speed Booster என்பது, 1-ஆம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல உங்களின் இணைய வேகத்தை அதிகரிக்கும் கூடுதல் சேவையாகும். நீங்கள் BYY திட்டத்தில் மட்டுமே Speed Booster சேவையில் சந்தாதாரராக முடியும் என்பதோடு இச்சேவை வேறு எந்த U Mobile இணைய ஒதுக்கீட்டுத் திட்டத்திலும் கிடைக்காது. Speed Booster -இன் செல்லுபடியாகும் காலம், இயக்கம் செய்யப்பட்டது முதல் 3 நாட்களாகும். இதில் சந்தாதாரராவதால் உங்களின் GX30 திட்டத்தில் கூடுதல் இணைய ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படாது. நீங்கள் Speed Booster சேவையில் சந்தாதாரராகிவிட்டால், நீங்கள் உங்களின் கட்டண விகிதம் அல்லது இணைய ஒதுக்கீட்டை மாற்றும்போது, பயன்படுத்தப்படாத இணைய ஒதுக்கீடுகள் மற்றும் செல்லுபடியாகும் காலகட்டங்கள் யாவும் உங்களின் Hotspot Booster சந்தாவிலிருந்து தள்ளுபடி செய்யப்படும், தொகை திரும்ப வழங்கப்படாது, மேலும் அவை உங்களின் புதிய கட்டண விகிதம் அல்லது இணைய ஒதுக்கீட்டில் கொண்டு சேர்க்கப்படாது.
e. Peer-to-peer (P2P)-இன் பயன்பாட்டு வேகம் 64kbps வரையிலானது.
f. நடமாடும் hotspot அல்லாத சேவைப் பயன்பாட்டிற்கு, நீங்கள் உங்களின் GX30 திட்டத்தை விவேகக் கைப்பேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதோடு MiFi மற்றும் USB dongle உள்ளிட்ட வேறு கருவிகளில் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப U Mobile தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, GX30 திட்டத்தைப் பயன்படுத்தக்கூடிய கருவிகளில் மாற்றங்களைத் செய்யக்கூடும்.
g. நீங்கள் விதிகளைப் பின்பற்றாதபட்சத்தில், உங்களின் GX30 திட்டத்தை எந்த ஒரு நிபந்தனையுமின்றி இடைக்கால நிறுத்தம் செய்யவோ அல்லது துண்டித்துவிடவோ U Mobile -க்கு தனிப்பட்ட அல்லது உயர் அதிகாரம் உண்டு.
h. இணைய ஒதுக்கீட்டின் சேவை, வலை அமைப்பின் சேவை எல்லை, தொடர்புத்திறன் மற்றும் பயன்பாட்டுக் கருவி ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடும். உங்களின் உண்மையான பதிவிறக்கத்தின் வேகம் மற்றும் இணைய ஒதுக்கீட்டின் செயல்பாட்டுத் திறம் ஆகியன வேறுபடலாம், குறையலாம், அல்லது பாதிக்கப்படலாம் ஆனால் கட்டுப்படுத்தப்படாது, இவையாவும் சேவைக்கோபுரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளி, எங்களின் சேவைக்கோபுரத்தின் செயல்திறன், நீங்கள் பதிவிறக்கம் செய்யும் வலைத்தளம், உங்களின் கைப்பேசியின் வகை மற்றும் ஆற்றல், பொதுவான இணைய பயன்பாட்டு அளவு மற்றும் சேவை எல்லை ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடும்.
i. வலைப்பின்னலில் சேவைத் தடங்கல் ஏதும் ஏற்படுமாயின், உங்களின் வழக்கமான (hotspot அல்லாத சேவை) இணையச் சேவை தற்செயலாக உங்களின் நடமாடும் hotspot ஒதுக்கீட்டிலிருந்து குறையலாம். இது நிகழும் சாத்தியத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டு, நாங்கள் இதற்குப் பொறுப்பில்லை என ஒப்புக்கொள்கின்றீர்கள்.
பதிப்பு : 17 July 2018
If you require further assistance, you can get in touch with us via the following channels.
MyUMobile App
Reach out to us through the MyUMobile App.
Drop us your message on Messenger.
Tweet us your enquiries and we will get back to you as soon as we can!
{{deviceBrand}}
{{deviceModel}}
{{deviceBrand}}
{{deviceModel}}