
Postpaid Plans
Enjoy up to 1,000GB 5G data with our new U Postpaid plans. Check it out now!
A. பொது
1. இந்த எல்லையற்ற Funz Prepaid திட்டம் (“திட்டம்”) சலுகை (“சலுகை”) 25 ஜூலை 2019 முதல் U Mobile திரும்பப்பெறும் வரை கிடைக்கின்றது. இந்த திட்டம் U Mobile பிரிபெய்ட் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வழங்கப்படுகின்றது. அத்துடன், சேவை விளக்கம், எங்கள் பயன்பட்டுக் கொள்கை, தனியுரிமை அறிவிப்பு மற்றும் இவ்விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் உட்படுத்திய விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் நீங்கள் இணங்க வேண்டும்.
2. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இந்தக் கட்டணங்கள் உட்பட விதிமுறைகளை மறுபரிசீலனை அல்லது மாற்றம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. இது உங்களுடனான எங்கள் ஒப்பந்தத்தில், நாங்கள் உங்களுக்கு பிற பகுதிகளில் அறிவிப்பு வழங்க வேண்டிய எந்தவொரு நிலையையும் ரத்து செய்கிறது.
3. on-net அழைப்புக்கான அதிகபட்ச தினசரி கட்டணம் RM1.00 ஆகும். அதன் பின்னர் செய்யப்படும் அனைத்து on-net அழைப்புகளும் நாள் முழுவதும் இலவசமாக அமையும் (“இலவச அழைப்புகள்”). உங்கள் இலவச அழைப்புகளின் காலத்தில் நீங்கள் ஏதேனும் on-net அழைப்புகளைச் செய்தால் அது 30 வினாடிகளைக் கொண்டதாக அமையும். மேலும், “on-net” என்றால்:
a. மலேசியாவிற்குள் U Mobile எண்களுக்கு மட்டும் செய்யப்படும் அழைப்புகள்
b. வேறு எந்த எண்களுக்கான அழைப்புகளுக்கும் கிடையாது.
c. காணொலி அழைப்புகள், IDD, அனைத்துலக ரோமிங், குரல் அழைப்பு (1311) அல்லது சிறப்பு எண்கள் / பிரீமியம் எண்களுக்கான அழைப்புகள் ஆகியவை கீழ்க்கண்ட கட்டணங்களுக்கு உட்பட்டவை:
No. |
அழைப்பின் வகை |
விதிக்கப்படும் கட்டணம் |
---|---|---|
i. | குரல் அழைப்பு | ஓர் அழைப்பிற்கு RM0.18 |
ii. |
ரோமிங்கில் செய்யப்படும் எந்த அழைப்புகளுக்கும் |
U Mobile ரோமிங் சேவையாளர்கள் விதித்த கட்டணத்தின் அடிப்படையில் அமையும் |
iii. |
1300 |
RM0.30/நிமிடம் |
iv. |
1-600-85-8888 (AirAsia) |
RM1.95/நிமிடம் |
v. |
1800 |
இலவசம் |
:
மேலே குறிப்பிடப்படாத சிறப்பு/பிரீமியம் எண்களுக்கான அழைப்புகள் அழைப்புபெறும் நிறுவனத்தால் குறிக்கப்படும் கட்டணங்களுக்கு உட்பட்டவை. மேலும், நீங்கள் எந்தவொரு அழைப்பைச் செய்யும் முன் அழைப்புபெறும் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து கட்டணங்களை அறிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
4. இந்த திட்டத்தின் கால அவகாசம் 5 நாள்கள் இயக்க காலமாகவும் (“அக்டிவ் பீரியட்”) 60 நாள்கள் சேவை இயக்கத்தில் இல்லாத காலமாகவும் (பேசிவ் பீரியட்) அமையும்.
a. இந்த ‘பேசிவ்’ காலத்தில், இணையம் பயன்படுத்தவோ, அழைப்புகள் செய்யவோ, SMS அனுப்பவோ இயலாது ஆனால் அழைப்புகளை ஏற்றுகொள்ளவும் SMS அனுப்பவும் இயலும்.
b. நீங்கள் ‘பேசிவ்’ காலகட்டத்தில் தொகை அதிகரிப்பு செய்யாவிட்டால், உங்கள் கணக்கிலிருக்கும் பணம் எந்தவொரு அறிவிப்புமின்றி எடுத்துக்கொள்ளப்படும்.
c. ‘அக்டிவ்’ காலத்தின் வரையறை உங்கள் தொகை அதிகரிப்பை பொறுத்தே அமையும். உதாரணமாக,
i. நீங்கள் எந்தவொரு தொகை அதிகரிப்பையும் செய்யாவிட்டாலும் அக்டிவ் காலம் 5 நாட்களாக இருக்கும்.
ii. நீங்கள் செலுத்தும் RM1.00, உங்கள் ‘அக்டிவ்’ காலத்தை ஒரு நாள் அதிகப்படுத்தும். ஆனாலும்,
A. நீங்கள் இத்திட்டத்தில் RM1.00 செலுத்தினால், அது ‘அக்டிவ்’ காலத்தின் கீழ் வரும். அதாவது, 5 நாள்கள் ஆகும் (நீண்ட ‘அக்டிவ்’ காலம் கொண்டதாகும்).
B. நீங்கள் RM10.00 செலுத்தினால் மேலும் 10 நாட்களுக்கு ‘அக்டிவ்’ காலமாக நீட்டித்துக் கொடுக்கப்படும்.
5. நீங்கள் உங்களுடைய கணக்கை ‘அக்டிவ்’ ஆக வைத்திருப்பதை உறுதி செய்துக்கொண்டால் நீங்கள் சலுகையில் வரும் எல்லா பயன்களையும் பெறுவீர்கள். அக்டிவ் என்பது அழைக்கவும் அழைப்புகளை ஏற்கவும் செய்யும்.
6. பிரத்தியேகமாக குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய இச்சலுகை வேறு எந்த சலுகையுடனும் இணைக்கவியலாது.
B. U Mobile -லிருந்து U Mobile-க்கு இலவச குரல் அழைப்புகள்
1. ‘அக்டிவ்’ காலத்தில் உங்கள் கணக்கிலிருந்து RM1.00 on-net -க்கு கொடுத்தால், நீங்கள் அதே நாளில் இலவச அழைப்புகளை மேற்கொண்டு மகிழலாம். அதாவது, on-net-க்கு கட்டணம் RM1.00 கட்டினால், அழைப்பு காலம் அதே நாளில் 0:00:01 முதல் 11:59:59 வரை கணக்கிடப்படும்.
2. on-net அழைப்புகளில் RM1.00 க்கு குறைவாகப் பயன்படுத்தும் நாள்களில், on-net அழைப்பிற்கான கட்டணம் எங்களின் அப்போதைய குரல் அழைப்பு கட்டணத்தைச் சார்ந்தே அமையும்.
3. உங்களுக்கு இலவச அழைப்புகளுக்கோ இலவச நிமிடங்களோ அல்லது வேறு சலுகையோ அல்லது வேறு சேவையோ இருந்தால் on-net அழைப்புகளின் ஒதுக்கீடு பின்வருமாறு பயன்படுத்தப்படும்:
a. மற்ற சலுகை அல்லது சேவையின் இலவச நிமிடங்கள் அல்லது கணக்கு வரவு.
b. இலவச அழைப்புகள்
மேலும் தெளிவிற்கு, உங்களுக்கு ஏதேனும் சலுகையினால் RM0.50 வரவு கிடைத்தால், முதலில் on-net அழைப்பு இலவச வரவினையும் தொடர்ந்து இலவச அழைப்புகளையும் எடுத்துக்கொள்ளும்.
4. இலவச அழைப்புகள் வேறு எந்த நபருக்கோ நிறுவனத்திற்கோ அல்லது வேறு பிரிபெய்ட் கணக்கிற்கோ மாற்ற இயலாது.
5. நீங்கள் பயன்படுத்தாத இலவச அழைப்புகள் ஒதுக்கீட்டை தொடர்ந்த பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியாது. இலவச அழைப்புகளின் ஒதுக்கீடு ஒவ்வொரு நாளும் 00:00:00 என மாற்றியமைக்கப்படும். அடுத்த நாள் on-net அழைப்புக்கான கட்டணம் RM1.00 இருப்பிலிருந்து கழிக்கப்பட்ட பின்பு நீங்கள் இலவச அழைப்புகளை அனுபவிக்கலாம்.
C. திட்டத்தை மாற்றுதல்
1. பயன்பாட்டிலுள்ள U Mobile சந்தாதாரர்கள் கொடுக்கப்பட்ட திகதியிலிருந்து திட்டத்தினை மாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.
2. ஒவ்வொரு மாற்றத்திற்கும் கட்டணமாக உங்கள் கணக்கிலிருந்து RM3.00 கழிக்கப்படும்.
3. இருப்பினும், நீங்கள் திட்டத்திற்கு மாறிய பின்னர், Unlimited Power Prepaid திட்டத்திற்கு மட்டுமே மாற அனுமதிக்கப்படுவீர்கள்.
4. நீங்கள் ‘பேசிவ்’ காலகட்டத்தில் திட்டத்தை மாற்ற அனுமதியில்லை. தயவுசெய்து திட்டத்தை மாற்றும் முன்பு உங்கள் கணக்கை இயக்கம் செய்யுங்கள்.
5. திட்டம் மாற்றுவதால் உங்கள் கணக்கிலுள்ள கடன் நிலுவையைத் தவிர தற்போதுள்ள இலவசங்கள் அல்லது சந்தாக்கள் யாவும் தள்ளுபடி செய்யப்படும்.
6. ஒவ்வொரு வெற்றிகரமான திட்ட மாற்றத்திற்கு பின்னர், உங்கள் கணக்கின் செயல் காலம் 5 நாள்கள் ‘ஆக்டிவ்’ காலமாகவும் 60 நாள்கள் ‘பேசிவ்’ காலமாகவும் உங்கள் பிரிபெய்ட் திட்டத்தைப் பொறுத்து மாற்றியமைக்கப்படும்.
இலவச இணையம்
1. இலவச இணையத்தைப் பெற்று மகிழ உங்களின் சேவைக்கணக்கு இயக்கத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. இலவச இணைய ஒதுக்கீட்டை வேறு எந்த நபருக்கோ, நிறுவனத்திற்கோ வேறு சந்தாதாரரின் பிரிபெய்ட் கணக்கிற்கோ மாற்ற இயலாது.
3. பயன்படுத்தாத இலவச இணைய ஒதுகீட்டை முன் கொண்டு செல்ல இயலாது.
4. இலவச இணையத்தை உள்நாட்டில் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், வெளிநாட்டில் இணையத்தை ‘ரோமிங்’-கில் பயன்படுத்த முடியாது. உங்கள் ‘ரோமிங்’ பயன்பாட்டினை U Mobile ரோமிங் சேவையாளர்கள் விதிக்கும் இணைய ‘ரோமிங்’ கட்டணத்தின்படி வசூலிக்கபடும்.
5. இணைய பயன்பாடு U Mobile-லின் நியாய பயன்பாட்டு கொள்கையின் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாக அமைந்திருக்கும். உங்கள் இலவச இணைய பயன்பாடு, இணைய ஒதுக்கீட்டு வேகம் ஆகியற்றை கண்காணித்து U Mobile-லின் நியாய பயன்பாட்டு கொள்கையின் மூலம் தடைசெய்யவோ நிறுத்தவோ செய்யலாம்.
இயக்கம் செய்தவுடன் இலவச இணையம்
1. திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியவுடன் 200MB இலவச அதிவேக இணையம் உடனடியாக உங்கள் காணக்கில் சேர்க்கப்படும்.
2. ஒரு SMS மூலம் உங்கள் காணக்கில் 200MB இலவச இணையம் சேர்க்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்படும்.
3. 200MB இலவச இணையம் செயல்படுத்தப்படும் நாளிலிருந்து 5 நாள்கள் செல்லுபடியாகும். 5 நாள்கள் முடியும்போது பயன்படுத்தாத இணைய ஒதுக்கீடு தள்ளுபடி செய்யப்படும்.
4. 200MB இலவச இணையத்தை வேறு U Mobile சந்தாதாரர்களுக்கு மாற்ற இயலாது
10 சமூக, தகவல் மற்றும் விளையாட்டு செயலிக்கான இலவச எல்லையற்ற இணையம்
1. நீங்கள் சமூக வலைத்தளங்களான, Facebook, Instagram, Twitter, WhatsApp, WeChat, IMO, Viber, Facebook Messenger, Mobile Legends and PUBG (“App and Web”). பயன்படுத்தும்போது இலவச எல்லையற்ற இணையத்தை (“இலவச எல்லையற்ற இணையம்”) பெற்றுக்கொள்வீர்கள்.
2. நீங்கள் குறைந்தபட்சம் RM10.00 அல்லது அதற்கும் மேலோ முதலில் தொகை அதிகரிப்பு செய்ததும் உங்கள் கணக்கில் இலவச எல்லையற்ற இணையம் சேர்க்கப்படும்.
3. இலவச எல்லையற்ற இணையம் பின்வருவனவற்றுக்குப் பொருந்தாது.
a. App மற்றும் Web-பில் இல்லாத வெளிப்புற இணைப்புகள்/பக்கங்களை அலசுதல்.
b. App தவிர மற்ற இணைய பயன்பாடு அல்லது உள்ளடக்கத்தை அணுகுதல் (விளம்பரம் மற்றும் இணைய பகுப்பாய்வு கருவிகள் உள்பட)
c. மூன்றாம் நபர் வலைத்தளம் அல்லது App மற்றும் Web வழி நடமாடும் செயலிகளை அணுகுதல்.
d. மலேசியாவிற்கு வெளியே ‘ரோமிங்’ பயன்பாடு. ‘ரோமிங்கில் பயன்படுத்தும்போது ‘ரோமிங்’ கட்டணங்கள் https://www.u.com.my/plans/roaming-idd/roaming-rates மூலம் பொருந்தும்.
4. App மற்றும் Web-பின் விளையாட்டு செயலி பெற நீங்கள் விவேக கைத்தொலைபேசி மூலம் இலவச எல்லையற்ற இனையத்தைப் பெறலாம், ஆனால் மற்றவைகளில் பெற முடியாது,
a. Mifi மற்றும் USB dongle உட்பட இதர சாதனங்களில்; அல்லது
b. mobile tethering அல்லது hotspot மூலம்.
U Mobile அதன் விருப்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது சாதனத்தின் தேவைகளில் மாற்றங்கள் செய்யலாம்.
5. இலவச எல்லையற்ற இணையத்தைப் பெற்று மகிழ உங்கள் சேவைகணக்கு இயக்கத்தில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும்
6. இலவச எல்லையற்ற இணையத்தைப் வேறு U Mobile வாடிக்கையாளர்களுக்கு மாற்ற இயலாது.
7. நீங்கள் App மற்றும் Web உள்ளடக்கங்களை அணுகும்போது உங்கள் இலவச எல்லையற்ற இணையத்தை மட்டும் பயன்படுத்த முயற்சி செய்வோம். ஆனாலும், உங்கள் இலவச எல்லையற்ற இணையத்துக்குப் பதிலாக நீங்கள் App மற்றும் Web-ஐ அணுகும்போது, உங்கள் இணைய ஒதுக்கீட்டை கவனக்குறைவாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பும் வரலாம். இது தொழில்நுட்ப சிக்கல்களான மூன்றாம் நபர் தவறான ஐபி முகவரியைக் கொடுத்தல் அல்லது App மற்றும் Web தங்களின் ஐபி முகவரிகளை மாற்றுதல் அல்லது புதுப்பித்தல் மற்றும் URL தகுந்த அறிவிப்பு தராமை ஆகிய பல காரணங்களால் நிகழலாம். இந்த நிகழ்வுகள் நடப்பதற்கான சாத்தியத்தை ஒப்புக்கொண்டு எங்களைப் பொறுப்பேற்பதிலிருந்து விடுபட ஏற்றுக்கொள்கிறீர்கள்.
8. App மற்றும் Web மீது U Mobile-க்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதையும் அல்லது App மற்றும் Web மூலம் உள்ளடக்கத்தை வழங்குவதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். U Mobile நாணயம், துல்லியம், நம்பகத்தன்மை, App மற்றும் Web பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உத்தரவாதம் அளிக்காது, மற்றும் நாங்கள் அனைத்து பொறுப்புகளையும் மறுக்கிறோம்.
9. நீங்கள் U Mobile, App மற்றும் Web உள்ளடக்கத்தை கண்காணிக்க தேவையில்லை என்று ஒப்புக்கொள்ளுகிறீர்கள். அதுமட்டுமல்லாமல், எந்தவொரு App மற்றும் Web உள்ளடக்கத்திற்கான அணுகுதலைத் தடை செய்யும் உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம், இது தொழில்நுட்பம் சம்மந்தமாக சாத்தியமானால் எந்த நேரத்திலும், பொருந்தக்கூடிய சட்டங்களோ விதிமுறைகளோ மீறுவதைத் தடுக்க அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.
இலவச அடிப்படை இணையம்
1. இத்திட்டம் இயக்கம் செய்யப்படும்போது இலவச அடிப்படை இணையம் கிடைகின்றது.
2. உங்கள் கணக்கு இயக்கத்தில் இருக்கும்போது நீங்கள் இலவச அடிப்படை இணையத்தைப் பெற்று மகிழலாம். எனினும், உங்கள் கணக்கு செயல்படாதபோதும், செயல்படும் வரையிலும் இச்சேவை தற்காலதடை செய்யப்பட்டிருக்கும்.
3. இலவச அடிப்படை இணையம் வரையறுக்கப்பட்ட வேகத்திற்கு உட்பட்டு 64kbps வரையிலும் மாதத்திற்கு 1GB வரையிலும் பயன்படுத்தலாம்
4. இலவச அடிப்படை இணைய ஒதுக்கீடு ஒவ்வொரு மாதத்தின் முதலாம் தேதியில் மாற்றியமைக்கப்பட்டு புது இணைய ஒதுக்கீடு உங்கள் கணக்கில் செயல்படும்.
Version Date: 23 July 2019
If you require further assistance, you can get in touch with us via the following channels.
MyUMobile App
Reach out to us through the MyUMobile App.
Drop us your message on Messenger.
Tweet us your enquiries and we will get back to you as soon as we can!
{{deviceBrand}}
{{deviceModel}}
{{deviceBrand}}
{{deviceModel}}