
Postpaid Plans
Enjoy up to 1,000GB 5G data with our new U Postpaid plans. Check it out now!
பொது
1. GX12 மற்றும் GX30 என இரு (2) வகையான Giler Unlimited Prepaid திட்டங்கள் உள்ளன (மொத்தமாக "திட்டங்கள்" எனவும் தனித்தனியாகத் "திட்டம்" எனவும் வழங்கப்படும்) பின்வரும் அட்டவணை இத்திட்டங்களின் சலுகைகள் குறித்து விவரிக்கின்றன.
திட்டம் | கட்டணம் | இணைய ஒதுக்கீடு | அழைப்புக்கான ஒதுக்கீடு | செல்லுபடியாகும் காலம் | தானியங்கி புதுப்பிப்பு |
---|---|---|---|---|---|
GX12 | RM12 | எல்லையற்றது | எல்லையற்றது | 7 நாட்கள் | உள்ளது |
GX30 | RM30 | எல்லையற்றது | Not Applicable | 30 நாட்கள் | உள்ளது |
2. இத்திட்டங்கள் U Mobile prepaid சந்தாதாரர்களுக்கு மட்டுமே செல்லும், U Broadband சந்தாதாரர்களுக்குச் செல்லுபடியாகாது
3. இத்திட்டங்கள் வேறெந்த தொலைபேசி எண்களுக்கும் மாற்றம் செய்யப்பட முடியாது.
4. ஒவ்வொரு திட்டமும் U Mobile Prepaid-இன் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சேவை வழங்கப்படுகின்றன. அந்த விதிகள் அனைத்திற்கும் கட்டுப்படுவதோடு எங்களின் நியாய பயன்பாட்டுக் கொள்கை, இரகசிய காப்புக் கொள்கை ஆகிய கூடுதல் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உடன்பட வேண்டும் (மொத்தமாக "விதிகள்" என வழங்கப்படும்) இவை அனைத்தும் www.u.com.my. என்ற அகப்பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கின்றது.
5. இத்திட்டங்களை ரத்து செய்யவோ, மாற்றம் செய்யவோ அல்லது கட்டண விகிதம் உட்பட பிற விதிகளை மாற்றம் செய்யவோ எங்களுக்கு உரிமை உண்டு.
6. பிரத்தியேகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர இத்திட்டங்களை வேறு எந்த சலுகைகளுடனும் இணைந்து பயன்படுத்தவியலாது.
இயக்கம் மற்றும் கட்டணம்
1. நீங்கள் இந்த ஒவ்வொரு திட்டத்தையும் உங்களின் தொடர்பாடல் கருவியிலேயே இயக்கம் செய்யலாம்:
a. MyUMobile App’s-இல் Add-ons பகுதி வாயிலாக; அல்லது
b. *118# என அழுத்தி; அல்லது
c. பின்வரும் குறியீட்டு சொற்களை 28118 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் வாயிலாக:
திட்டம் | குறியீட்டு சொல் |
---|---|
GX12 | ON GX12 |
GX30 | ON GX30 |
அனுப்பப்படும் ஒவ்வொரு SMS-க்கும் RM0.05 கட்டணம் விதிக்கப்படும்.
2. நீங்கள் இயக்கம் செய்வதற்கு முன்னர் மற்றும் உங்கள் சந்தாவின் எந்தவொரு புதுப்பிப்புக்கும் முன்னர், பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதுபோல் அந்தந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச தொகை மீதம் இருத்தல் அவசியம்.
திட்டம் | குறைந்தபட்ச தொகை மீதம் |
---|---|
GX12 | RM12 |
GX30 | RM30 |
3. அந்தந்தத் திட்டத்திற்காக விதிக்கப்படும் இயக்கக் கட்டண விபரம் பின்வருமாறு:
திட்டம் | இயக்கக் கட்டணம் |
---|---|
GX12 | RM12 |
GX30 | RM30 |
4. நீங்கள் சந்தாதாரரான திட்டத்திற்கான குறிப்பிட்ட கட்டணத்தை நீங்கள் அனுமதி அளித்தாலும் அல்லது அளிக்காவிடினும் உங்களின் இருப்புத் தொகை மீதத்திலிருந்து கழித்துவிடுவோம். தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது, தொகை மீட்புக்கான கோரிக்கையும் பரிசீலிக்கப்படமாட்டாது.
5. இத்திட்டங்களில் செல்லுபடியாகும் காலம், இயக்கம் செய்த நாள் முதல் 7 நாட்கள் (GX12-க்கு) மற்றும் 30 நாட்கள் (GX30-க்கு). இத்திட்டம் காலாவதியாகும்போது, 2-ஆவது பத்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல (இயக்கம் மற்றும் கட்டணம்) உங்களிடம் குறைந்தபட்ச இருப்புத் தொகை மீதம் இருந்தால் மட்டுமே இத்திட்டம் தானியங்கியாக சேவை தொடரப்படும்.
6. அப்படி உங்களிடம் குறைந்தபட்ச இருப்புத் தொகை மீதம் இல்லாத காரணத்தால் உங்களின் திட்டம் தானியங்கியாக சேவை தொடரப்பட முடியாது போனால், உங்களின் சேவை புதுப்பிப்பு செய்யப்படாது.
7. நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ப எத்தனை திட்டங்களை வேண்டுமானாலும் இயக்கம் செய்யலாம். உங்கள் சேவை புதுப்பிக்கப்பட்டவுடன் மீதமிருந்த இணைய ஒதுக்கீடுகள் யாவும் தள்ளுபடி செய்யப்படும்.
8. உங்கள் திட்டத்தை நீங்கள் ரத்து செய்ய நினைத்தால், அதனை
a. *118#-இல் UMB வாயிலாக; அல்லது
b. “OFF GX12” அல்லது “OFF GX30” என 28118 என்ற எண்ணுக்கு SMS வாயிலாக செய்யலாம். அனுப்பப்படும் ஒவ்வொரு SMS-க்கும் RM0.05 கட்டணம் விதிக்கப்படும்.
9. உங்கள் திட்டத்தை நீங்கள் ரத்து செய்யும்போது மீதமிருந்த இணைய ஒதுக்கீடுகள் யாவும் தள்ளுபடி செய்யப்படும். அதன் பிறகு மேற்கொள்ளப்படும் இணைய பயன்பாடுகள் அந்தந்த திட்டங்களின் பிரிபெய்ட் கட்டண விகிதப்படி கணக்கிடப்படும்.
இணையச் சேவை
1. இத்திட்டங்களில் சந்தாதாரராகும்போது, எல்லையற்ற இணையச் சேவையை 3Mbps வேகம் வரையில் நீங்கள் அனுபவிக்கலாம். இத்திட்டத்தில் எல்லையற்ற காணொலிகள் மற்றும் இசையை நீங்கள் அடிப்படை ஒலி/ஒளி தரத்தில் கண்டும் கேட்டும் மகிழலாம்.
2. Mobile hotspot பயன்பாட்டுக்காகத் தனித்தனியே 1GB (GX12-க்கு) மற்றும் 3GB (GX30-க்கு) இணைய ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த இணைய ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டு முடிந்தபின், உங்கள் சேவையின் வேகம் கட்டுப்படுத்தப்படும்.
3. பத்தி 2-இல் குறிப்பிட்டுள்ள மாதாந்திர இணைய ஒதுக்கீட்டிற்கு அதிகப்படியாக, mobile hotspot -க்கான கூடுதல் ஒதுக்கீடு Hotspot Booster என வழங்கப்படும், இது ஒரு கூடுதல் சேவையாகும். இத்திட்டங்களின் வாயிலாக மட்டுமே நீங்கள் Hotspot Booster-ஐ பெற இயலும், U Mobile-இன் மற்ற இணைய ஒதுக்கீட்டுச் சேவைக்கு இது செல்லுபடியாகாது. Hotspot Booster அது இயக்கம் செய்யப்பட்ட 3 நாட்களுக்குச் செல்லுபடியாகும். Hotspot Booster-ஐ இயக்கம் செய்த பின்னர் உங்களின் கட்டண விகிதம் அல்லது இணையத் திட்டத்தை மாற்றம் செய்தீர்களானால், பயன்படுத்தப்படாத இணைய ஒதுக்கீடு மற்றும் Hotspot Booster-இன் செல்லுபடியாகும் காலம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படுவதோடு தொகை திரும்ப அளிக்கப்படாது மற்றும் உங்களின் புதிய கட்டண விகிதம் அல்லது இணைய திட்டத்துக்கும் அது மாற்றம் செய்யப்படாது.
4. பத்தி 1-இல் குறிப்பிடப்பட்டிருக்கும் இணையத்தின் வேகத்தை அதிகரிக்கும் கூடுதல் சேவையே Turbo Booster ஆகும். இத்திட்டங்களின் வாயிலாக மட்டுமே நீங்கள் Turbo Booster-ஐ பெற இயலும், U Mobile-இன் மற்ற இணைய ஒதுக்கீட்டுச் சேவைக்கு இது செல்லுபடியாகாது. Turbo Booster அது இயக்கம் செய்யப்பட்ட 1 நாளைக்கு செல்லுபடியாகும். இதன் இயக்கத்தின் வாயிலாக உங்கள் திட்டத்தின் இணைய ஒதுக்கீட்டைத் தவிர கூடுதல் ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படமாட்டாது. Turbo Booster -ஐ இயக்கம் செய்த பின்னர் உங்களின் கட்டண விகிதம் அல்லது இணையத் திட்டத்தை மாற்றம் செய்தீர்களானால், பயன்படுத்தப்படாத இணைய ஒதுக்கீடு மற்றும் Turbo Booster -இன் செல்லுபடியாகும் காலம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படுவதோடு தொகை திரும்ப அளிக்கப்படாது மற்றும் உங்களின் புதிய கட்டண விகிதம் அல்லது இணைய திட்டத்துக்கும் அது மாற்றம் செய்யப்படாது.
5. Peer-to-peer (P2P) பயன்பாட்டின் வேகம் 64kbps வரை இருக்கும்.
6. Non-mobile hotspot பயன்பாட்டுக்கு, இத்திட்டங்களை விவேக கைத்தொலைபேசி வாயிலாக மட்டுமே பயன்படுத்த முடியும், MiFi மற்றும் USB dongle உட்பட பிற கருவிகளில் பயன்படுத்த முடியாது. U Mobile அதன் உரிமையின் அடிப்படையில் அவ்வப்போது இத்திட்டங்களின் கருவிகளின் பயன்பாட்டுத் தேர்வுகளில் மாற்றம் செய்யலாம்
7. இத்திட்டங்களின் விதிகளுக்கு முரணாக நீங்கள் செயல்பட்டிருந்தால், U Mobile அதன் தனிப்பட்ட மற்றும் உயரிய உரிமையின் அடிப்படையில், எந்தவொரு கடப்பாடும் இல்லாது எந்த நேரத்திலும் உங்களின் திட்டத்தை முடக்கி வைக்கவோ அல்லது நிறுத்தம் செய்யவோ அதிகாரம் பெற்றிருக்கிறது.
8. இணையச் சேவை பிணையத்தின் கட்டுப்பாடுகள், கிடைக்கும் தன்மை மற்றும் தொடர்பாடல் கருவியின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். உங்களின் உண்மையான பதிவிறக்கம் செய்யும் வேகம் மற்றும் இணையச் சேவையின் செயல்திறன் வேறுபடலாம் அல்லது மெதுவாக இருக்கலாம், சேவைக் கோபுரத்திலிருந்து உங்களின் தூரம், எங்களின் சேவைக் கோபுரத்தின் கொள்திறன், நீங்கள் பதிவிறக்கம் செய்யும் மூல தளம், உங்கள் கைத்தொலைபேசியின் வகை மற்றும் தரம், பொதுவான இணைய சேவை அளவு மற்றும் சேவைத் துழாவுகை ஆகியவற்றால் பாதிக்கப்படலாம் ஆனால் வரையறுக்கப்படாது.
9. பிணையம் செயல்பாடற்றுப் போனால், உங்களின் வழக்கமான (hotspot அல்லாத) இணையச் சேவை ஒதுக்கீடு உங்களின் mobile hotspot ஒதுக்கீட்டிலிருந்து கழிக்கப்படும். இது நிகழக்கூடிய சாத்தியத்தை நீங்கள் ஒப்புக்கொண்டு எங்களை இதன் பொறுப்பாளிகளாக ஆக்காதிருக்க ஒப்புக்கொள்ளவேண்டும்.
குரல் சேவை
1. குரல் சேவை உள்ளூர் கைத்தொலைபேசிகளுக்கு, உள்ளூரில் பொருத்தப்பட்ட on-net மற்றும் off-net பயன்பாட்டுக்கானது, அதோடு காணொலி அழைப்புகள், MMS, அனைத்துலக நேரடி அழைப்பு (IDD), அனைத்துலக ரோமிங், குரல் அஞ்சல் (1311)அல்லது சிறப்பு எண்களுக்கான அழைப்புகள்/பிரிமிய எண்கள் (எ.கா.: 1300 / 1500 / 1508 / 1600 / 1700 / 1900 / 103, 800 & 15999), சிங்கப்பூருக்கான எல்லை அழைப்புகளின் 02-prefix எண்கள் மற்றும் புரூணை எல்லை அழைப்புகளின் 080-prefix எண்கள் ஆகியவற்றுக்குச் செல்லுபடியாகாது.
2. நீங்கள் இந்த குரல் சேவையை கண்டிப்பாக உங்களின் வழக்கமான தினசரி கைத்தொலைபேசிக்கான குரல் சேவையாக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர வர்த்தக முறைக்காகப் பயன்படுத்தக்கூடாது. நியாய பயன்பாட்டுக் கொள்கையின் விரிவில், இத்திட்டம் பின்வருவனவற்றைச் செய்யக்கூடாது:
a. மறு-விற்பனை அல்லது இதர பிற வழிகளில் பயன்படுத்தப்படக்கூடாது.
b. ஒரே நேரத்தில் பல்வேறு ஒருசேர் அழைப்புகளுக்காகப் பயன்படுத்துதல், ஒரே நேரத்தில் பலரை அழைத்தல், மறு-வழங்கீடு, சேவை மைய பயன்பாடு, டெலிமார்க்கெட்டிங், application-to-person தொடர்பாடல், நீண்ட நேரத்துக்கான தொடர்ச்சியான அழைப்புகள், தானியங்கி அழைப்புகள், machine-to-machine தொடர்பாடல்;
c. மொத்த விற்பனைக்காகப் பயன்படுத்துதல் அல்லது SIM boxing-க்ககவோ அல்லது உங்கள் பிணையத்தில் திரள் நிமிடங்களுக்காகப் பயன்படுத்தல்;
d. ஒரு கருவி, மென்பொருள் அல்லது செயலி ஆகியவற்றில் இணைப்பு செய்து அழைப்புகளை திருப்பம் செய்தல் (re-routes calls)
e. கருவிகளில் நிலைமாற்றம் செய்து, ஒரு சேவைத்தொடர்பைத் தொடர்ந்து பல மணி நேரங்களுக்கு திறந்தநிலையில் வைத்திருந்து, இதர வாடிக்கையாளர்கள் எங்களின் பிணையத்தைப் பயன்படுத்தும் திறனைக் கட்டுப்படுத்துதல்; அல்லது
f. சாதாரண பயன்பாடு அல்ல என U Mobile நிர்ணயிக்கும் இதர ஏதேனும் செயற்பாடுகள்
3. எங்களின் இதர உரிமை மற்றும் அதிகாரத்தின்பேரில், நீங்கள் ஏதாவது ஒரு வகையில் எங்களின் விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டிருந்தால் உங்களின் திட்டத்தை நாங்கள் முடக்கி வைக்கவோ அல்லது நிறுத்தம் செய்யவோ முடியும், அதோடு பயன்படுத்தப்படாத தொகையாவும் தள்ளுபடி செய்யப்படும்.
Version: 5 August 2019
If you require further assistance, you can get in touch with us via the following channels.
MyUMobile App
Reach out to us through the MyUMobile App.
Drop us your message on Messenger.
Tweet us your enquiries and we will get back to you as soon as we can!
{{deviceBrand}}
{{deviceModel}}
{{deviceBrand}}
{{deviceModel}}