
Postpaid Plans
Enjoy up to 1,000GB 5G data with our new U Postpaid plans. Check it out now!
பொது
1. இந்தச் சலுகை அனைத்து U Mobile பிரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும், 17 பிப்ரவரி 2017 தொடங்கி, U Mobile பிரிபெய்டின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப கிடைக்கப்பெறும். குறிப்பிட்ட சேவை விளக்கம், Fair Use Policy, Privacy Policy உட்பட அந்தச் சேவை விதிகள் அனைத்திற்கும் மேலும், இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் நீங்கள் இணங்க வேண்டும்(ஒட்டுமொத்தமாக, “விதிகள்”).
2. உங்களிடம் அறிவிப்பு செய்யாமலேயே கட்டண விகிதங்கள் உட்பட விதிகளை மாற்றியமைக்கவோ அல்லது மாற்றிவிடவோ எங்களுக்கு அதிகாரம் உண்டு. இதன்வழி, உங்களுடனான எங்கள் ஒப்பந்தத்தின் வேறு பகுதிகளில் நாங்கள் முன்கூட்டியே உங்களிடம் அறிவிப்பு செய்ய வேண்டியுள்ள விதிமுறைகள் செல்லாமல் போகும்.
3. உங்களின் இலவச அழைப்பின் காலத்தின்போது நீங்கள் மேற்கொள்ளும் on-net அழைப்புகள் 60 விநாடிகள் தொகுதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். On-net அழைப்பு எனப்படுவது U Mobile எண்ணிலிருந்து இன்னொரு U Mobile எண்ணுக்கு அழைப்பது, பிற சேவை நடத்துனர்களின் பிணையத்திற்கு அல்ல.
4. இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளில் “இலவச அழைப்புகள்” அல்லது “U Mobile-லிலிருந்து U Mobile-க்கு” என இருப்பின் அது இலவச on-net அழைப்புகள் கீழ்க்கண்ட கால வரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என பொருள்படும்.
5. மற்றொரு U Mobile சலுகையின் கீழ் இலவச அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-கள் ஏதும் இருப்பின், இந்தச் சலுகையின் கீழ் உள்ள இலவச அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-கள் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் அந்தச் சலுகைகள் முதலில் பயன்படுத்தப்படும்.
6. அதிகபட்ச இலவச அழைப்புகள் 150 நாட்களுக்கு மேற்போகாது.
7. மற்றொரு U Mobile சலுகையின் கீழ் இலவச அழைப்பு நிமிடங்கள் ஏதும் இருப்பின், இந்தச் சலுகையின் கீழ் உள்ள இலவச அழைப்பு நிமிடங்கள் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் அந்தச் சலுகைகள் முதலில் பயன்படுத்தப்படும்.
8. Unlimited Power Prepaid திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் 10 நாட்கள் இயக்கக் காலம் மற்றும் 60 நாட்கள் நிலுவைக் காலம் என்ற வரம்புகளுக்கு உட்பட்டது. நிலுவைக் காலத்தின்போது, இணைய பயன்பாடு, அழைப்புகளை மேற்கொள்வது மற்றும் SMS-கள் அனுப்புவது உட்பட எந்தச் சேவையையும் மேற்கொள்ள இயலாது. மாறாக, அழைப்புகளையும் SMS-களையும் நீங்கள் பெறலாம். இந்த நிலுவைக் காலத்துக்குள்ளாக நீங்கள் தொகை அதிகரிப்பைச் செய்யவில்லையெனில், முன்னறிவிப்பின்றி உங்கள் சேவை தானியங்கியாகவே நிறுத்தம் செய்யப்படும்..
செல்லுபடியாகும் காலம் உங்களின் தொகை அதிகரிப்பிலிருந்து 1x ஆகும். இலவச அழைப்புகளின் செல்லுபடியாகும் காலம் உங்கள் கணக்கின் அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். இருப்பினும், தொடர்ந்து செய்யப்படும் தொகை அதிகரிப்பின் செல்லுபடியாகும் காலம் தற்போது இருக்கும் செல்லுபடியாகும் தேதிக்குப் பிறகாக இருப்பின், உங்களின் புதிய செல்லுபடியாகும் காலம் நீங்கள் செய்த தொகை அதிகரிப்பின் மதிப்பு மற்றும் தேதியின் அடிப்படையிலும் கணக்கிடப்படும். இல்லையேல், காலாவதியாகும் தேதியில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் 1-ஆவது நாளில் RM30-க்குத் தொகை அதிகரிக்கிறீர்கள் மேலும் இன்னொரு RM10-ஐ 15-ஆவது நாளில் தொகை அதிகரிக்கிறீர்கள் என்றால், உங்களின் இலவச அழைப்புக்கான செல்லுபடியாகும் காலம் 30-ஆவது நாள் வரை மட்டுமே, 40-ஆவது நாள் அல்ல. இருப்பினும், நீங்கள் 1-ஆவது நாளில் RM30-க்குத் தொகை அதிகரிக்கிறீர்கள் மேலும் இன்னொரு RM10-ஐ 25-ஆவது நாளில் தொகை அதிகரிக்கிறீர்கள் என்றால், இப்போது உங்களின் இலவச அழைப்புக்கான செல்லுபடியாகும் காலம் 35-ஆவது நாளாகும்.
9. இவ்வனைத்து சலுகைகள் மற்றும் சேவைகளை நீங்கள் அனுபவிக்க வேண்டுமெனில், நீங்கள் உங்களின் சேவைக்கணக்கைத் தொடர்ந்து சேவைக்காலம் முழுவதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
10. பிரத்தியேகமாகக் குறிப்பிடப்படாத வரை இச்சலுகைகளை வேறெந்த சலுகைகளுடனும் சேர்ந்தாற்போல் அனுபவிக்கவியலாது.
11. நாங்கள் மீட்டுக்கொள்ளும்வரை இந்தச் சலுகை கிடைக்கப்பெறும்.
U Mobile எண்ணிலிருந்து U Mobile எண்ணுக்கான ஒலி அழைப்புகள
12. நீங்கள் தொகை அதிகரிப்பு செய்யும் ஒவ்வொரு RM1-க்கும் காலவரை அடிப்படியிலான இலவச on-net அழைப்புகளை நீங்கள் அனுபவிக்க முடியும்.
13. Unlimited Power திட்டத்துக்கான இலவச on-net அழைப்புகள் காலவரை அடிப்படியில் இல்லாது நாள் முழுமையும் மேற்கொள்ள முடியும். இலவச on-net அழைப்புகள் முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டு முடிந்த பின், தொடர்ந்து நீங்கள் மேற்கொள்ளும் on-net ஒலி அழைப்புகள் 12சென்/30விநாடிகள் என்ற அடிப்படையில் கணக்கிடப்படும்.
14. இலவச அழைப்புகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 நிமிடங்களுக்கு வழங்கப்படும்.
15. இந்த இலவச அழைப்புகள் பிறருக்கோ, பிற தரப்பினருக்கோ, மற்ற பிரிபெய்ட் சேவைக் கணக்கிற்கோ மாற்றம் செய்ய இயலாது.
16. பயன்படுத்தப்படாத இலவச அழைப்புகள் மற்றும் SMS-களுக்கான ஒதுக்கீடுகளை மறுநாளைக்குக் கொண்டு செல்ல இயலாது. உங்களுக்குக் கிடைத்த இலவச அழைப்புகளை நீங்கள் பயன்படுத்தாத பட்சத்தில் ஒவ்வொரு நாள் நள்ளிரவு 12. 00 மணிக்கு அவை தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.
17. இந்த இலவச அழைப்புகள் உள்நாட்டில் மட்டுமே பயன்படுத்தக்கூடியது (மலேசியாவில் மட்டுமே), நீங்கள் வெளிநாடுகளில் இருக்கையில் ரோமிங்கில் இதனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டீர்கள். நீங்கள் வெளிநாடுகளில் இருக்கையில் ரோமிங் சேவையில் ஒலி அழைப்புகளை மேற்கொள்ளும்போது தற்போது இருக்கும் U Mobile ரோமிங் சேவை வழங்குநர்களின் கட்டண விகிதத்தின் அடிப்படையில் உங்கள் அழைப்பு கணக்கிடப்படும்.
திட்டங்களை மாற்றுதல்
18. ஏற்கனவே U Mobile பிரிபெய்ட் சந்தாதாரர்களாக இருப்பவர்கள் Unlimited Power Prepaid திட்டத்திற்கு 17 பிப்ரவரி 2017 முதல் மாற அனுமதிக்கப்படுவார்கள்.
19. ஒவ்வொரு முறை நீங்கள் வெற்றிகரமாக மாற்றம் செய்யும்போதும், இதற்கு மாற்றுவதற்கான சேவைக் கட்டணமாக RM3 உங்களின் சேவைக்கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
20. இருப்பினும், Unlimited Power Prepaid திட்டத்திற்கு மாறிய பின்னர், நீங்கள் மீண்டும் திரும்ப விரும்பினால் Power Prepaid திட்டத்துக்கு மட்டுமே மாற அனுமதிக்கப்படுவீர்கள்.
21. நிலுவைக் காலத்தின்போது நீங்கள் உங்களின் திட்டத்தை மாற்ற இயலாது. தயவு செய்து தொகை அதிகரிப்பு செய்து உங்கள் சேவைக்கணக்கை இயக்கம் செய்த பின்னர் திட்டத்தை மாற்றுங்கள்.
22. நீங்கள் தற்போது கொண்டிருக்கும் அனைத்து இலவச சலுகைகள் மற்றும்/அல்லது சாந்தாமுறை ஆகியவை நீங்கள் வெற்றிகரமாக வேறு திட்டங்களுக்கு மாற்றம் செய்யப்படும்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிடும், மாறாக உங்கள் சேவைக்கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை மட்டும் புதிய திட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
23. எந்தத் திட்டங்களாயினும், ஒவ்வொரு முறை நீங்கள் வெற்றிகரமாக வேறு திட்டங்களுக்கு மாற்றம் செய்யப்படும்போதும், உங்களின் செல்லுபடியாகும் காலம் 10 நாட்கள் இயக்கக் காலம் மற்றும் 60 நாட்கள் நிலுவைக் காலம் என மறு கணக்கீடு செய்யப்படும்.
இலவச இனையம் (விதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் Fair Usage கொள்கை)
24. இலவச இனையத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டுமெனில், நீங்கள் உங்களின் சேவைக்கணக்கைத் தொடர்ந்து இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
25. வழங்கப்படும் இந்த இலவச இணையம் பிறருக்கோ, பிற தரப்பினருக்கோ, மற்ற பிரிபெய்ட் சந்தாதாரரின் சேவைக் கணக்கிற்கோ மாற்றம் செய்ய இயலாது.
26. பயன்படுத்தப்படாத இலவச இணையத்துக்கான ஒதுக்கீடுகள் செல்லுபடியாகும் காலத்தோடு தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.
27. இந்த இலவச இணைய ஒதுக்கீடுகள் உள்நாட்டில் மட்டுமே பயன்படுத்தக்கூடியது (மலேசியாவில் மட்டுமே), நீங்கள் வெளிநாடுகளில் இருக்கையில் ரோமிங்கில் இணைய பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படமாட்டீர்கள். நீங்கள் வெளிநாடுகளில் இருக்கையில் ரோமிங் இணைய பயன்பாட்டை மேற்கொள்ளும்போது தற்போது இருக்கும் U Mobile ரோமிங் சேவை வழங்குநர்களின் கட்டண விகிதத்தின் அடிப்படையில் உங்கள் இணைய பயன்பாடு கணக்கிடப்படும்.
28. இந்த இணைய பயன்பாடு மற்றும்/அல்லது நுகர்வு யாவும் U Mobile-இன் Fair Usage Policy-யுடைய விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. U Mobile-இன் Fair Usage Policy-யின் அடிப்படையில் இலவச இணையம் உட்பட உங்களின் இணைய ஒதுக்கீட்டை மேலாண்மை செய்யவும் & உங்கள் இணைய ஒதுக்கீட்டின் வேகத்தை நிர்ணயம் செய்யவும், தற்காலிக அல்லது நிரந்தர நிறுத்தம் செய்யவும் U Mobile-க்கு அதிகாரம் உண்டு.
இயக்கம் செய்தவுடனான இலவச இனையம்
29. நீங்கள் உங்களது சேவைக்கணக்கை இயக்கம் செய்தவுடன் உங்களுக்கு இலவச 200MB அதிவிரைவு இணையம் வழங்கப்படும்.
30.உங்களது சேவைக்கணக்கை இயக்கம் செய்தவுடன் உங்களுக்கு இலவச 200MB அதிவிரைவு இணையம் வழங்கப்பட்டிருப்பதைத் தெரிவிக்கும் SMS ஒன்று உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த இலவச 200MB இணையம் இயக்கம் செய்த நாளிலிருந்து 10 நாட்களுக்குச் செல்லுபடியாகும். 10-நாட்கள் செல்லுபடியாகும் காலம் முடியும்போது பயன்படுத்தப்படாத இணைய ஒதுக்கீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.
31. இலவச 200MB இணையத்தைப் பிற U Mobile சந்தாதாரர்களுக்கு மாற்றம் செய்ய இயலாது.
App-Onz –க்கான இலவச எல்லையற்ற இணையம்
32. App-Onz –க்கான இலவச எல்லையற்ற இணையம் Facebook, Instagram & Twitter உட்பட 3 சமூக வலைத்தளங்களுக்கானவை மட்டுமே.
33. Facebook-ஆல் மேலாண்மை செய்யப்படாத அனைத்து வெளி தொடர்புகள்/பக்கங்கள் யாவையும் வலம் வருவதற்கான இணைய பயன்பாடு உங்களின் இணைய ஒதுக்கீட்டிலிருந்தோ அல்லது அடிப்படை இணையத்திலிருந்தோ கழிக்கப்படும்.
34. App-Onz –க்கான இலவச எல்லையற்ற இணையம் ஒரு முறைக்கான குறைந்தபட்சம் RM10 அல்லது அதற்கும் மேல் முதல் தொகை அதிகரிப்பு செய்த உடனேயே உங்கள் சேவைக்கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.
35. இலவச எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டை நீங்கள் அனுபவிக்க வேண்டுமெனில், நீங்கள் உங்களின் சேவைக்கணக்கைத் தொடர்ந்து சேவைக்காலம் முழுவதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
36. App-Onz –க்கான இலவச எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டைப் பிற U Mobile சந்தாதாரர்களுக்கு மாற்றம் செய்ய இயலாது.
37. Refer to App-Onz page for more info. பக்கத்தை அணுகுங்கள்
38. மேலும் தகவல்களுக்கு App-Onz பக்கத்தை அணுகுங்கள்.
இலவச அடிப்படை இணையம்
39. அனைத்து Unlimited Power Prepaid இயக்கத் திட்டங்களும் இலவச அடிப்படை இணையத்தைக் கொண்டிருக்கின்றன.
40. உங்கள் சேவைக்கணக்கு இயக்கத்தில் உள்ளவரை நீங்கள் இலவச அடிப்படை இணையத்தை அனுபவிக்கலாம். இருப்பினும், உங்கள் சேவைக்கணக்கு இயக்கத்தில் இல்லையெனில், இலவச அடிப்படை இணையச் சேவை நிறுத்தம் செய்யப்பட்டு, பின்னர் உங்களின் சேவைக்கணக்கு இயக்கத்திற்கு வந்தபின் மறுபடி இயக்கம் செய்யப்படும்.
41. இலவச அடிப்படை இணையத்தின் பயன்பாடு 64kbps என்ற குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே கிடைக்கும், இது fair usage policy அடிப்படையில் மாதத்துக்கு 1GB வரையில் செல்லும்.
42. இலவச அடிப்படை இணையம் ஒவ்வொரு மாதத்தின் 1-ஆம் தேதியும் மறு கணக்கீடு செய்யப்பட்டு, புதிய இலவச அடிப்படை இணைய ஒதுக்கீடு உங்களின் கணக்கில் சேர்ப்பிக்கப்படும்.
பதிப்புத் தேதி : 17-02-2017
If you require further assistance, you can get in touch with us via the following channels.
MyUMobile App
Reach out to us through the MyUMobile App.
Drop us your message on Messenger.
Tweet us your enquiries and we will get back to you as soon as we can!
{{deviceBrand}}
{{deviceModel}}
{{deviceBrand}}
{{deviceModel}}