
U Home 5G x sooka VIP
Get fibre-like speeds and exclusive live sports with our U Home 5G x sooka VIP Bundle. Enjoy home entertainment with your loved ones - just click here!
1. இந்த இணைய ஒதுக்கீட்டுச் சேவை (“சேவை”) எங்களது நிபந்தனைப் பாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சேவை விதிகளின் அடிப்படையில் வழங்கப்படும். Fair Use Policy உட்பட அந்த சேவை விதிகள் அனைத்திற்கும் மேலும், இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் நீங்கள் இணங்க வேண்டும் (ஒட்டுமொத்தமாக, “விதிகள்”).
2. இந்தச் சேவைகளில் நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு இணைய ஒதுக்கீட்டுச் சேவையில் மட்டுமே சந்தாதாரராக ஆக முடியும்.
3. இந்தச் சேவை, இணைய ஒதுக்கீட்டுச் சேவையாகும் இதன் வழி இணையம் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட சேவைகள் எங்களின் 3G/4G பிணையத்தின் வாயிலாக மட்டுமே, அதுவும் 3G/4G பிணையம் கிடைக்கக்கூடிய எல்லைகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும். இந்தச் சேவை பிணைய வரம்பு, கிடைக்கப்பெறும் எல்லை மற்றும் பயன்படுத்தப்படும் கருவியின் திறன் ஆகியவற்றைப் பொருத்தது. நீங்கள் இச்சேவையை எங்களின் 3G/4G பிணைய எல்லைக்கு வெளியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தப் பயன்படுத்த முடியாது. பிணைய எல்லை குறித்து மேலும் தகவல்கள் பெற www.u.com.my என்ற அகப்பக்கத்துக்குச் செல்லுங்கள்.
4. உங்களது திட்டத்தின் வாயிலாக நீங்கள் பதிவிறக்கம் செய்யும் வேளையில் அதன் வேகம் வேறுபடலாம் அல்லது சற்று தாமதமாகலாம் ஆனால் அந்த அளவிலேயே கட்டுப்படுத்தப்படவில்லை. தாமதத்திற்கு, உங்களுக்கும் எங்களின் பிணையக் கோபுரத்திற்கும் உள்ள இடைவெளி, எங்களின் பிணையக் கோபுரத்தின் செயல்பாட்டு நிலை, நீங்கள் பதிவிறக்கம் செய்யும் மூலம், உங்களின் கைத்தொலைபேசியின் வகை மற்றும் தரம், நீங்கள் பயன்படுத்தும் வன்பொருள் மற்றும் மென்பொருள் அல்லது பொதுவான இணைய நகர்ச்சி நிலை (Internet traffic) ஆகியவை காரணமாக அமையலாம்.
5. நீங்கள் இச்சேவைவை உங்களது கணினி அல்லது மடிக்கணினியில் பயன்படுத்துவதானால், உங்களுக்கு எங்களின் 3G/4G பிணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 3G/4G modem ஒன்று தேவைப்படும். இச்சேவைவை உங்களது கைத்தொலைபேசியிலேயோ அல்லது நடமாடும் இதர தொடர்புக் கருவிகளிலேயோ பயன்படுத்துவதானால், 3G/4G சேவையை ஏற்கும் கைத்தொலைபேசி அல்லது நடமாடும் இதர தொடர்புக் கருவிகள் தேவை.
6. உங்களின் திட்டம் இயக்கம் செய்யப்பட்ட பின்னர், உங்களது இணைய ஒதுக்கீடு காலாவதியாகும் நாள் வரையிலோ அல்லது உங்களின் ஒதுக்கீடு தீர்ந்துபோகும் வரையிலோ எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தொடர்ந்து சேவை வழங்கப்படும். நீங்கள் உங்களின் இணைய ஒதுக்கீட்டுத் திட்டத்தைத் துண்டிக்க இயலாது.உங்கள் இணைய ஒதுக்கீட்டுச் சேவைத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம், அச்சேவை இயக்கம் செய்த நாளிலிருந்து கணக்கிடப்படும்.
7. உங்களின் இணைய ஒதுக்கீட்டுச் சேவைத் திட்டம் காலாவதியாகிவிட்டால், பயன்படுத்தப்படாத இணைய ஒதுக்கீடுகள் அடுத்த சேவைப் புதுப்பிப்புக் காலத்திற்குக் கொண்டு செல்லப்படமாட்டா. அவை தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். நீங்கள் வேறு ஏதும் இணைய ஒதுக்கீட்டுச் சேவைத் திட்டத்திற்கு மாற்றாவிட்டால், காலாவதியாகிய பின்னர் (அப்படி வாடிக்கையாளர் தானியங்கி புதுப்பிப்புக்கு இணக்கம் தெரிவிக்காவிட்டால்) பயன்படுத்தப்படும் இணைய ஒதுக்கீடுகள் RM0.20/MB (ஒவ்வொரு 1MB சேவைத்தொகுதிக்கும் அல்லது அவற்றில் ஒரு பாகம் மட்டுமோ ஒரு குறிப்பிட்ட கால வரையின்போது அனுப்பப்பட்டோ அல்லது பெறப்பட்டோ இருக்கும்பட்சத்தில்) என்ற ரீதியில் கணக்கிடப்படும். அப்படி உங்களின் இணைய ஒதுக்கீட்டுச் சேவைத் திட்டத்தை நீங்கள் மாற்றி இருந்தால் அந்தத் திட்டத்திற்கு ஏற்றவாறு உங்கள் கட்டணம் கணக்கிடப்படும்.
8. உங்களின் சேவைத்திட்டம் எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டைக் கொண்டது என்றால், நீங்கள் இன்னும் எங்களின் Fair Use Policy-க்கு உட்பட்டே இருக்கிறீர்கள். உங்களின் மாதாந்திர பதிவிறக்க மற்றும் பதிவேற்ற பயன்பாட்டின் மொத்த அளவு உங்களுக்கு வழங்கப்பட்ட அதிவிரைவு இணைய ஒதுக்கீட்டை விட அதிகமாக ஆகும் அல்லது Fair Use Policy-யில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவில் இருக்குமேயானால் இந்தக் கொள்கையின் அடிப்படையில் எங்களுக்குள்ள அதிகாரத்தின்படி உங்களது சேவையை மேலாண்மை செய்யவோ, முடக்கி வைக்கவோ அல்லது நிறுத்தம் செய்யவோ, அல்லது வரம்புகள் ஏதுமில்லாது சேவையின் வேகத்தைக் குறைக்கவோ வாய்ப்பு உள்ளது.
9. இணைய ஒதுக்கீடு KB அதிகரிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படும். இணைய ஒதுக்கீடு அல்லாத சேவை (ஒலி அழைப்பு, SMS/MMS, காணொலி அழைப்பு, ரோமிங் மற்றும் பன்னாட்டு அழைப்புச் சேவைகள் உட்பட உள்ளீட்டு சந்தா சேவைகள்) ஆகியவை தனிப்பட்ட ரீதியில் எங்களின் வழக்கமான கட்டண விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும், இவை உங்களின் சேவைத்திட்டத்தில் அடங்கா.
10. உங்களின் தற்போதைய இணைய ஒதுக்கீட்டுத் திட்டம் காலாவதியாகிவிட்டாலோ அல்லது உங்களின் இணைய ஒதுக்கீடு பயன்படுத்தி முடிக்கப்பட்டுவிட்டாலோ தான் நீங்கள் உங்களின் இணைய ஒதுக்கீட்டுத் திட்டத்தை மாற்ற இயலும். நீங்கள் மாற்றம் செய்த புதிய இணைய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
11. உங்களின் சொந்த இணைய ஒதுக்கீட்டின் பயன்பாட்டைக் கண்காணித்துக்கொள்வது உங்களின் பொறுப்பு. உங்களின் இணைய ஒதுக்கீட்டின் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காக நாங்கள் வழங்கியிருக்கும் அளவுக் கருவிகள் உங்கள் சௌகரியத்துக்கானவை மட்டுமே. அந்த அளவைக் கருவிகளில் காட்டப்படும் எண்ணிக்கை தோராயமானது மட்டுமே, அது அறுதியானது அன்று.
12. இந்தச் சேவையை இயக்கம் செய்வதற்கு எங்களின் பரிந்துரைபடி நீங்கள் குறைந்தபட்ச முறைமை தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தச் சேவையின் தரம், நீங்கள் உபயோகிக்கும் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றைச் சார்ந்ததாகும். எங்களது USIM அல்லது சேவை, நீங்கள் உபயோகிக்கும் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றுக்கு ஏற்புடையது என நாங்கள் எந்தவொரு முன்னெடுப்போ அல்லது உத்தரவாதமோ தரவில்லை.
13. நீங்கள் ஒரு சந்தாதாரராக ஆவதற்கு 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இச்சேவையின் வாயிலாக உங்களுக்குக் கிடைக்கப்பெறும் இணைய தகவல் உள்ளீடுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்தச் சேவையைப் பெற நீங்கள் பயன்படுத்தும் மென்பொருட்கள் முறையான உரிமம் பெற்றவையாக இருப்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.நீங்கள் இச்சேவையை மூன்றாவது தரப்பினருக்கு மறுபடி விற்கவோ, பகிரவோ அல்லது மற்ற வகைகளில் பங்கீடோ செய்யக்கூடாது.
14. நீங்கள் இந்த ஒப்பந்தத்துக்கு ஏற்ப செயல்படுகிறீர்களா என்பதை உறுதி செய்யும் பொருட்டு உங்களின் சேவைக்கணக்கை நாங்கள் கண்காணிக்கக்கூடும். இச்சேவையைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் அதைச் சார்ந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இந்தச் சேவையை நீங்கள் தவறாகப் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த விசாரணைக்கான செலவீனம் மற்றும் உங்களின் தவறான பயன்பாட்டினால் இதர வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் செலுத்தவேண்டியிருக்கும் இழப்பீடு ஆகியவற்றை உங்களிடமிருந்து நாங்கள் வசூலிக்கக்கூடும்.
15. கட்டண விகிதங்கள் உட்பட விதிகளை மாற்றியமைக்கவோ அல்லது மாற்றிவிடவோ எங்களுக்கு அதிகாரம் உண்டு.
16. பிரத்தியேகமாகக் குறிப்பிடப்படாத வரை இச்சலுகைகளை வேறெந்த சலுகைகளுடனும் சேர்ந்தாற்போல் அனுபவிக்கவியலாது.
17. நாங்கள் மீட்டுக்கொள்ளும்வரை இந்தச் சலுகை கிடைக்கப்பெறும்.
If you require further assistance, you can get in touch with us via the following channels.
MyUMobile App
Reach out to us through the MyUMobile App.
Drop us your message on Messenger.
Tweet us your enquiries and we will get back to you as soon as we can!
{{deviceBrand}}
{{deviceModel}}
{{deviceBrand}}
{{deviceModel}}