
Postpaid Plans
Enjoy up to 1,000GB 5G data with our new U Postpaid plans. Check it out now!
பொது
1. மொத்தம் ஐந்து (5) எல்லையற்ற நடமாடும் இணையத் திட்டங்கள் உள்ளன; Unlimited Mobile Internet 20 ("UMI 20"), Unlimited Mobile Internet 25 ("UMI 25”), Unlimited Mobile Internet 30 ("UMI 30”), Unlimited Mobile Internet 36 ("UMI 36”), Unlimited Mobile Internet 38 ("UMI 38") மற்றும் Unlimited Mobile Internet 50 ("UMI 50") இவை ஒவ்வொன்றும் உள்ளூர் ஒலி அழைப்புகள், உள்ளூர் SMS-கள் (UMI 38 மட்டும்) இணைய ஒதுக்கீடு ஆகியவற்றைக் கொண்ட 30 நாட்கள் காலக்கெடுவைக் கொண்ட திட்டங்கள் (ஒட்டுமொத்தமாக “திட்டங்கள்” மற்றும் தனித்தனியே “திட்டம்”).
2. U Broadband சந்தாதாரர்கள் தவிர, இந்தத் திட்டங்களை அனைத்து U Mobile பிரிபெய்ட் சந்தாதாரர்கள் மட்டும் பெறலாம்.
3. இந்தத் திட்டங்களை வேறு எந்த கைத்தொலைபேசி எண்களுக்கும் மாற்றம் செய்யவியலாது.
4. ஒவ்வொரு திட்டமும் U Mobile Prepaid-இன் விதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. Fair Use Policy, Privacy Policy உட்பட எல்லா விதிகளுக்கும், அதோடு இந்தக் கூடுதல் விதிகள் மற்றும் நிபந்தனைகள் யாவற்றையும் பின்பற்ற வேண்டும் (ஒட்டுமொத்தமாக, “விதிகள்”) இவையாவையும் www.u.com.my என்ற அகப்பக்கத்தில் காணலாம்.
5. கட்டண விகிதங்கள் உட்பட விதிகளை மாற்றியமைக்கவோ அல்லது மாற்றிவிடவோ எங்களுக்கு அதிகாரம் உண்டு.
6. பிரத்தியேகமாகக் குறிப்பிடப்படாத வரை இச்சலுகைகளை வேறெந்த சலுகைகளுடனும் சேர்ந்தாற்போல் அனுபவிக்கவியலாது.
இயக்கம் செய்தல் மற்றும் கட்டணங்கள்
1. ஒவ்வொரு திட்டத்தையும் *118# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்தி இயக்கம் செய்யலாம் அல்லது உங்கள் கைத்தொலைபேசியில் (UMI 20 திட்டத்துக்கு "ON UMI 20", UMI 25 திட்டத்துக்கு "ON UMI 25" , UMI 30 திட்டத்துக்கு "ON UMI 30 ", UMI 38 திட்டத்துக்கு "ON UMI 38" மற்றும் UMI 50 திட்டத்துக்கு "ON UMI 50") என 28118-க்கு SMS அனுப்புங்கள்.
2. நீங்கள் இயக்கம் செய்வதற்கு முன், உங்கள் சேவைக்கணக்கில் குறைந்தபட்ச தொகையாக UMI 20-க்கு RM20-உம், UMI 25-க்கு RM25-உம், UMI 30-க்கு RM30-உம், UMI 38-க்கு RM38-உம் மற்றும் UMI 50-க்கு RM50-உம் இருக்க வேண்டும்.
3. இயக்கக் கட்டணமாக UMI 20-க்கு RM20-உம், UMI 25-க்கு RM25-உம், UMI 30-க்கு RM30-உம், UMI 38-க்கு RM38-உம் மற்றும் UMI 50-க்கு RM50-உம் விதிக்கப்படும். நாங்கள் UMI 20-க்கு RM20-ஐயும், UMI 25-க்கு RM25-ஐயும், UMI 30-க்கு RM30-ஐயும், UMI 38-க்கு RM38-ஐயும் மற்றும் UMI 50-க்கு RM50-ஐயும் அந்த இயக்கம் நீங்கள் ஒப்புதல் அளித்ததாக இருந்தாலும் இல்லையென்றாலும் உங்கள் இருப்புத் தொகையிலிருந்து கழித்துக்கொள்வோம். பணத்தைத் திரும்பப் பெறல் அல்லது தொகை கோரிக்கை ஆகிய எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
4. இவற்றின் செல்லுபடியாகும் காலம், இயக்கம் செய்த தினத்திலிருந்து 30 நாட்களாகும். UMI 20-க்கு RM20-உம், UMI 25-க்கு RM25-உம், UMI 30-க்கு RM30-உம், UMI 38-க்கு RM38-உம் மற்றும் UMI 50-க்கு RM50-உம் மீதத் தொகையாக இருந்தால் மட்டுமே காலாவதியாகும் நாளுக்குப் பிறகு உங்களின் சேவை தானியங்கியாக இயக்கம் செய்யப்படும். பயன்படுத்தப்படாத அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-கள் (UMI 38-க்கு மட்டும்)ஆகியவை நீங்கள் தொடர்ந்து அதே திட்டத்தை வாங்கியிருந்தால் மீண்டும் உங்கள் உபயோகத்திற்காக உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். (UMI 20 திட்டத்திலிருந்து மீண்டும் UMI 20, UMI 30 திட்டத்திலிருந்து மீண்டும் UMI 30, UMI 38 திட்டத்திலிருந்து மீண்டும் UMI 38 மற்றும் UMI 50 திட்டத்திலிருந்து மீண்டும் UMI 50). இருந்தபோதிலும், பயன்படுத்தப்படாத அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-கள்(UMI 38-க்கு மட்டும்) மொத்தம் 40 நிமிடங்கள் (UMI 20-க்கு), 60 நிமிடங்கள் (UMI 30-க்கு), 300 நிமிடங்கள் மற்றும் 60 SMS-கள்(UMI 38-க்கு) மற்றும் 100 நிமிடங்கள் (UMI 50-க்கு) என்ற எண்ணிக்கைக்கு மேல் உங்களின் புதுப்பிப்பின்போது இருக்கக்கூடாது. இந்த எண்ணிக்கைக்கு மேல் உள்ள அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-கள் யாவும் தள்ளுபடி செய்யப்படும். அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-களுக்கான புதுப்பிப்பு யாவும் UMI25-க்கு செல்லுபடியாகாது, ஏனெனில் இத்திட்டத்தில் அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-களுக்கான சலுகைகள் கிடையாது.
5. ஏற்கனவே உங்களுடைய திட்டம் அல்லாத மற்றொரு திட்டத்தை நீங்கள் வாங்குவதாயின், (எ.கா. இப்போது நீங்கள் UMI 50 திட்டத்தில் சந்தாதாரராக இருக்கிறீர்கள் ஆனால் தற்போது நீங்கள் UMI 30 திட்டத்தில் சந்தாதாரராக ஆக எண்ணியுள்ளீர்கள்) உங்களிடம் மீதமிருக்கும் அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-கள் யாவும் உங்கள் புது சேவைக்கணக்கிற்குக் கொண்டு வரப்படாது. UMI 30 திட்டத்தில் சந்தாதாரராக நீங்கள் சந்தாதாரரானதும், பயன்படுத்தப்படாத அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-கள் யாவும் தள்ளுபடி செய்யப்படும். ஆகக் கடைசியாக நீங்கள் சந்தாதாரராகும் திட்டத்தில் உள்ள அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-களை மட்டுமே நீங்கள் அனுபவிக்க இயலும்.
6. உங்கள் சேவைக்கணக்கில் தொகை குறைவாக இருக்கும் காரணத்தினால் தானியங்கியாக புதுப்பிப்பு செய்யப்பட இயலவில்லை எனில், உங்கள் சேவைக்கணக்கு வேறெந்த வழியிலும் புதுப்பிப்பு செய்யப்பட இயலாது. பயன்படுத்தப்படாத அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-கள் யாவும் தள்ளுபடி செய்யப்படும், அதோடு நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் அனுப்பும் SMS-கள் யாவும் எங்களின் வழக்கமான கட்டண விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
7. நீங்கள் எத்தனை திட்டங்களை வேண்டுமானாலும் உங்கள் விருப்பப்படி இயக்கம் செய்யலாம். பயன்படுத்தப்படாத அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-கள் யாவும் மேற்குறிப்பிட்டுள்ளபடி உங்களின் சேவைக்கணக்கில் அதிகபட்ச வரம்பை எட்டும் வரை சேர்க்கப்படும்
8. எந்தவொரு திட்டத்திலுமுள்ள அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS-களுக்கான ஒதுக்கீடுகளை நீங்கள் மீறிவிட்டால், நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்தல் SMS ஒன்றை அனுப்புவோம் அல்லது *118# என அழுத்தி எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீதத்தை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். இருப்பினும், அறிவுறுத்தல் SMS-ஐ அனுப்பாததாலோ அல்லது தாமதமாக அனுப்பியதற்காகவோ ஏற்படும் விரையத்துக்காக பணத்தைத் திரும்பப் பெறல் அல்லது தொகை கோரிக்கை செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
9. நீங்கள் ஒரு திட்டத்தை ரத்து செய்ய விரும்பினால், அதனை நீங்கள் UMB வாயிலாக *118# மூலமாகவோ அல்லது UMI 20-க்கு "OFF UMI 20" எனவும், UMI 25-க்கு "OFF UMI 25" எனவும், UMI 30-க்கு "OFF UMI 30" எனவும், UMI 38-க்கு "OFF UMI 38" எனவும் மற்றும் UMI 50-க்கு "OFF UMI 50" எனவும் 28118-க்கு தகவல் அனுப்பவும் செய்யலாம். பயன்படுத்தப்படாத சலுகைகள் தள்ளுபடி செய்யப்படும். அதன் பின்னர் பயன்படுத்தப்படும் இணையம், பயன்பாட்டுக்கு ஏற்ப பணம் செலுத்தும் திட்டத்தின் அடிப்படையில் அந்தந்த பிரிபெய்ட் திட்டத்தின் விகிதத்தில் கணக்கிடப்படும்.
ஒலி அழைப்புச் சேவை
1. இத்திட்டங்களில் சந்தாதாரராவதன் வழி நீங்கள் 20 நிமிட உள்ளூர் அழைப்புகள் (UMI 20 திட்டத்துக்கு), 30 நிமிட உள்ளூர் அழைப்புகள் (UMI 30 திட்டத்துக்கு), 150 நிமிட உள்ளூர் அழைப்புகள் (UMI 38 திட்டத்துக்கு) மற்றும் 50 நிமிட உள்ளூர் அழைப்புகள் (UMI 50 திட்டத்துக்கு) பெறுவீர்கள் இதில் மேலனுப்பு அழைப்புகள் (call forwarding) மற்றும் சிறப்பு எண்கள் எ.கா 1300 அல்லது 1800 ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படமாட்டா. நீங்கள் இந்த வரம்பை மீறிவிட்டால், நீங்கள் தற்போது சந்தாமுறையில் இருக்கும் திட்டத்தின் அடிப்படையில் கட்டண விகிதங்கள் கணக்கிடப்படும்.
2. உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அழைப்புக்கான தொகை உங்கள் அழைப்பின் கால அளவின் அடிப்படையில் கழிக்கப்படும். On-net மற்றும் Off-net ஆகிய இரு வகை அழைப்புகளுக்கும் கட்டணம் 30 விநாடிகள் தொகுதியில் (30 second block ) கணக்கிடப்படும். On-net அழைப்பு எனப்படுவது U Mobile எண்ணிலிருந்து இன்னொரு U Mobile எண்ணுக்கு அழைப்பது எனவும், Off-net அழைப்பு எனப்படுவது U Mobile எண்ணிலிருந்து மற்றொரு உள்ளூர் சேவை நடத்துனரின் எண்களுக்கு அழைப்பது எனவும் பொருள்படும். நீங்கள் எங்களின் பல பேர்கள் ஒரே நேரத்தில் அழைக்கும் சேவையைப் (multi-party conferencing service) பயன்படுத்தினால், திரட்டப்பட்ட உங்களின் அழைப்புகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அழைப்புக்கான தொகையில் ஒரு பகுதியாகக் கணக்கிடப்படும்.
இணைய ஒதுக்கீடு
1. இத்திட்டங்களில் சந்தாதாரராவதன் வழி நீங்கள் எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டைப் பயன்படுத்த இயலும், இருந்தபோதிலும் நீங்கள் எங்களின் Fair Use Policy-க்கு உட்பட்டே இருப்பீர்கள். மேலும், நீங்கள் 500MB–க்கும் கூடுதலாகப் பயன்படுத்தினால் (UMI 20 திட்டத்துக்கு), 1GB –க்கும் கூடுதலாகப் பயன்படுத்தினால் (UMI 25 திட்டத்துக்கு), 1.5GB –க்கும் கூடுதலாகப் பயன்படுத்தினால் (UMI 30 திட்டத்துக்கு), 1GB –க்கும் கூடுதலாகப் பயன்படுத்தினால் (UMI 38 திட்டத்துக்கு) மற்றும் 3GB –க்கும் கூடுதலாகப் பயன்படுத்தினால் (UMI 50 திட்டத்துக்கு) எங்களுக்குள்ள அதிகாரத்தின்படி, விதிகளின் அடிப்படையில் எங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாது, உங்களது சேவையை மேலாண்மை செய்யவோ, முடக்கி வைக்கவோ அல்லது நிறுத்தம் செய்யவோ, அல்லது வரம்புகள் ஏதுமில்லாது சேவையின் வேகத்தைக் குறைக்கவோ வாய்ப்பு உள்ளது. எங்களது சந்தாதாரர்கள் அனைவருக்கும் தரமான சேவையை வழங்குவதே எங்களின் குறிக்கோள், அதோடு வாடிக்கையாளர்களில் யாரேனும் செய்யும் தவறுக்காகப் பிற வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றோம்.
2. இந்த இணைய ஒதுக்கீட்டுச் சேவை பிணைய வரம்பு, கிடைக்கப்பெறும் எல்லை மற்றும் பயன்படுத்தப்படும் கருவியின் திறன் ஆகியவற்றைப் பொருத்தது.
3. இச்சேவையின் வேகம் வேறுபடலாம் அல்லது சற்று தாமதமாகலாம் ஆனால் அந்த அளவிலேயே கட்டுப்படுத்தப்படவில்லை, தாமதத்திற்கு உங்களுக்கும் எங்களின் பிணையக் கோபுரத்திற்கும் உள்ள இடைவெளி, எங்களின் பிணையக் கோபுரத்தின் செயல்பாட்டு நிலை, நீங்கள் பதிவிறக்கம் செய்யும் மூலம், நீங்கள் பயன்படுத்தும் வன்பொருள் மற்றும் மென்பொருள் அல்லது பொதுவான இணைய நகர்ச்சி நிலை (Internet traffic) ஆகியவை காரணமாக அமையலாம்.
பதிப்பு : 30 மே 2015
If you require further assistance, you can get in touch with us via the following channels.
MyUMobile App
Reach out to us through the MyUMobile App.
Drop us your message on Messenger.
Tweet us your enquiries and we will get back to you as soon as we can!
{{deviceBrand}}
{{deviceModel}}
{{deviceBrand}}
{{deviceModel}}